Latestமலேசியா

சீனி நைனா முகம்மதுவின் தமிழ் வாழ்த்துப் பாடலை சிறுமைப்படுத்தி குரல் பதிவு – தமிழ் எழுத்தாளர் சங்கம் போலீசில் புகார்

கோலாலம்பூர், ஜன 9 -அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் ஒலிக்கப்பட்ட தமிழ் வாழ்த்துப் பாடலுக்கு ஒருவர் எழுந்து நிற்க தவறியதை கண்டித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இயக்கங்களும் தனி நபர்களும் குரல் கொடுத்தது தொடர்பாக, கவிஞர் சீனி நைனா முகம்மதுவின் தமிழ் வாழ்த்துப் பாடலை சிறுமைப்படுத்தி அடையாளம் தெரியாத ஒருவர் குரல் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இது குறித்து மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் திங்கட்கிழமை செந்தூல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளது.

அந்த குரல் பதிவுக்குரிய நபர் யார் என்பதை போலீசார் கண்டறிந்து, விசாரணை நடத்தி அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

அதோடு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட தமிழ் வாழ்த்து பாடலை எழுதிய கவிஞர் சீனி நைனா முகம்மதுவை மத மாற்றுக் கும்பலைச் சேர்ந்தவர் என குரல் பதிவில் கூறிய நபரை மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ஞான சைமனும், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க அயலக குழுத் தலைவர் பெ.இராஜேந்திரனும் கடுமையாக சாடினர்.

15 ஆண்டுளுக்குப் பின் தமிழ் வாழ்த்தப் பாடலை இயற்றிய கவிஞர் சீனி நைனா முகம்மதுவை மரியாதைக் குறைவாக பேசியது கண்டிக்கத்தக்கது என மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் தெரிவித்தது.

மலேசிய சூழலுக்கு ஏற்ப மலேசியர்களுக்காக மலேசிய கவிஞரால் தமிழ்த்தாய் பாடல் இயற்றப்பட்டது. அவரை சிறுமைப்படுத்துவது நமது தாய்மொழியை பழிப்பதற்கு ஒப்பாகும் என மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் தெரிவித்திருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!