Latestஉலகம்

நாயின் வயிற்றில் 200 கிரேம் எடை கொண்ட 60 ஹேர்பேண்டுகள்; உரிமையாளர் அதிர்ச்சி

இங்கிலாந்து, ஜன 14 – வளர்ப்பு நாயின் வயிற்றிலிருந்து 200 கிரேம் எடை கொண்ட 60 ஹேர்பேண்டுகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து, அதன் உரிமையாளர் குடும்பத்தினர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

ஹாம் என்ற பெயரிடப்பட்ட வளர்ப்பு நாயின் செயல்பாடு கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட மாறுபட்டுள்ளதை கண்டறிந்த உரிமையாளர், அதை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது நாயின் வயிற்றில் 200 கிரேம் எடை கொண்ட 60 ஹேர்பேண்ட்கள் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.

‘இதற்கு முன்பு ஹாம்-மின் தலைமுடியைக் கட்டப் பயன்படுத்தப்படும் ஒரு ஹேர்பேண் அதன்வாய்லிருந்து வெளிவந்ததை நாங்கள் கவனித்துள்ளோம். ஆனால், இவ்வளவு ஹேர்பேண்ட் அதன் வயிற்றில் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ என்று அதன் உரிமையாளர் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து அந்த ஹேர்பேண்ட்கள் அகற்றப்பட்டு தற்போது அந்த வளர்ப்பு நாய் நன்றாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!