Latestமலேசியா

பஸ்களுக்கான சிறப்பு வழித்தடத்தை அகலப்படுத்தவும் DRT வேன்கள் வாங்குவதற்கும் ரி.ம 50 மில்லியன் ஒதுக்கீட்டிற்கு அரசாங்கம் அங்கீகாரம்

புத்ரா ஜெயா, மார்ச் 7 – பஸ்களுக்கான சிறப்பு வழித்தடத்தை அகலப்படுத்தவும் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கவிருக்கும் கிள்ளான் பள்ளத்தாகிற்கான DRT பரிமாற்றத்திற்காக 100 வேன்களை வாங்குவதற்கும் 50 மில்லியன் மானியத்திற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளது. நேரத்தை குறைப்பதற்காக ஜாலான் அம்பாங் மற்றும் ஜாலான் கெந்திங் கிள்ளான் பஸ்களுக்கான சிறப்பு பஸ் வழிதடத்தை அமைப்பதற்காக கடந்த ஜூலை 3ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக துணைப்பிரதமரும் சாலை பாதுகாப்பு மற்றும் நெரிசல் மீதான அமைச்சரவை குழுவின் தலைவருமான டத்தோ ஸ்ரீஅஹமட் சாஹிட் ஹமிடி தெரிவித்திருக்கிறார். தினசரி 20 முதல் 45 விழுக்காடு கூடுதலான பயணிகள் இருப்பதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பஸ் பயணம் செய்வதற்கு 18 நிமிட நேரம் மட்டுமே பிடிக்கும் என ஆய்வின் வழி தெரியவந்துள்ளது.

பஸ் பயணத்திற்கான நேரத்தை ஆக்கப்பூர்வமாக குறைப்பதற்காக Jalan Ampang மற்றும் Jalan கெந்திங் கிள்ளான் பஸ் வழித்தடத்தை தொடர்ந்து நிலைநாட்டுவதற்கு சாலை பாதுகாப்பு மற்றும் நெரிசல் மீதனா அமைச்சரவை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக Ahmad Zahid வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். மேலும் 2024 , ஜூன் முதல் ஜாலான் கிள்ளான் லாமாவில் சிறப்பு பஸ் வழித்தடத்தை அகலப்படுத்துவதற்கும் , ஜாலான் செராஸ் தாமான் Connaught முதல் ஜாலான் புடு வரை மற்றும் கோலாலம்பூர் – Shah Alam சாலை சந்திப்பிற்கான கூட்டரசு நெடுஞ்சாலைவரை பஸ்களுக்கான சிறப்பு வழித்தடத்தை அமல்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!