Latestஉலகம்

ரஷ்யாவில், பெட்ரோல் நிலையத்தில் ‘லைட்டரை’ பற்ற வைத்த ஆடவரால் பெரும் தீ விபத்து

மோஸ்கோ, டிசம்பர் 12 – ரஷ்யாவில், கீழே விழுந்து காணாமல் போன காரின் பெட்ரோல் “டேங்க்” மூடியை கண்டுபிடிக்க “லைட்டரை” பற்றவைத்த ஆடவர் ஒருவரின் செயலால், எண்ணெய் நிலையம் ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

தீ ஏற்படுவதற்கு முன், ஓட்டுனர் பெட்ரோல் டேங்க் மூடியை தேடும் காட்சி, சம்பந்தப்பட்ட எண்ணெய் நிலையத்தில் பொறுத்தப்பட்டிருக்கும் CCTV இரகசிய கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.

தீ மூண்டதும், அவ்வாடவர் தனது காரில் இருக்கும் பயணிகளை காப்பாற்ற விரைந்து ஓடுவதை காண முடிகிறது. அந்த ஆடவரின் செயலால், பெட்ரோல் ஊற்ற பயன்படுத்தப்படும் எண்ணெய் குழாயிக்கும் தீ பரவியது.

அதனால், காரில் இருந்த இரு பயணிகள் வெளியேறியதும், தீப்பற்றி எரியும் காரை, எண்ணெய் குழாயிக்கு அருகிலிருந்து அகற்ற அவ்வாடவர் மீண்டும் விரைகிறார். தீயைக் கட்டுப்படுத்த எண்ணெய் நிலைய பணியாளர்கள் அவருக்கு உதவியதாக கூறப்படுகிறது.

அச்சம்பவத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது தெரியவில்லை. அதோடு, சம்பந்தப்பட்ட ஓட்டுனரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!