Latestமலேசியா

ஜொகூரில் மலையேறியபோது காணாமல்போன இருவர் 6 மணி நேரத்திற்குப் பிறகு கண்டுப் பிடிக்கப்பட்டனர்

கோத்தா திங்கி , டிச 17- ஜோகூரில் கோத்தா திங்கியிலுள்ள குனோங் பந்தி மலையேறும் முயற்சியில் ஈடுபட்டிருந்த உள்நாட்டைச் சேர்ந்த ஒர் ஆடவரும், பெண்ணும் காணாமல்போன 6 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் கண்டுப்பிடிக்கப்பட்டனர்.

20 வயது மதிக்கத்தக்க அவர்கள் இருவரும் வாகனத்தின் மூலம் அருகேயுள்ள போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அவர்கள் பாதுகாக்கப்பட்ட வன பகுதிக்குள் நுழைவதற்கு முன் எந்தவொரு அனுமதியையும் பெறவில்லையென ஜொகூர் காட்டுவளத்துறையின் இயக்குனர் டத்தோ சலீம் அமன் தெரிவித்தார்.

அதோடு மலையேறும் உதவியாளர் மற்றும் காட்டுவளத் துறைக்கான வழிகாட்டியின் உதவியின்றி அவர்கள் மலையேறும் முயற்சியில் ஈடுபட்டதாக அவர் கூறினார். மலைப்பகுதியிலிருந்து கீழே இறங்கும்போது பாதையை இழந்துவிட்டதாக சனிக்கிழமை மாலை மணி 6.50 அளவில் பத்து அம்பாட் போலீஸ் நிலையத்திற்கு அவர்கள் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களை தேடும் பணி நேற்றிரவு மணி 7.40க்கு தொடங்கியதாகவும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 25 பேர் தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சலீம் அமன் கூறினார்.

நேற்றிரவு மணி 10.20 அளவில் பந்தியில் பாதுகாக்கப்பட்ட காட்டுவளப் பகுதியில் அவர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார். அந்த இருவரும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதோடு, அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதோடு, அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் நுழைந்ததற்காக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும் சலீம் அமன் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!