Latestமலேசியா

தற்காலிக அமைதி உடன்பாட்டின்கீழ் ஹமாஸ் தரப்பு விடுவித்த பிணையாளிகள் இஸ்ரேல் சென்றடைவர்

காஸா, நவ 26 – தற்காலிக அமைதி உடன்பாட்டின் கீழ் ஹமாஸ் தரப்பு விடுவித்த
17 பினையாளிகள் இன்று இஸ்ரேல் சென்றடைவர் . அந்த பிணையாளிகளில் 13 இஸ்ரேலியர்களும் தாய்லாந்தை சேர்ந்த நால்வரும் அடங்குவர் .

கட்டார் மற்றும் எகிப்து ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட அமைதி உடன்பாட்டின் கீழ் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். எனினும் இந்த உடன்பாடு முறியடியும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காணப்பட்ட உடன்பாட்டின் மூலம் இஸ்ரேலைக் சேர்ந்த பிணையாளிகளும் 150 பாலஸ்தீன கைதிகளும் பரிமாறிக்கொள்ளப்பட வேண்டும். இதில் தற்போது முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே நான்கு நாட்கள் காசாவை விட்டு வெளியேறிய பிறகு ரஃபா எல்லையைக் கடக்கும் எகிப்தியப் பகுதியில் பிணையாளிகளை ஹமாஸ் நேற்று பிற்பகுதியில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்ததை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் காட்டின.

விடுவிக்கப்பட்ட 13 இஸ்ரேலியர்களில், ஆறு பேர் பெண்கள் மற்றும் ஏழு பேர் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர்கள் இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்ற பின்னர் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைவார்கள் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பிணையாளிகளுக்கு ஈடாக, 33 சிறார்கள் உட்பட 39 பாலஸ்தீன குடிமக்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர். இஸ்ரேலிய ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பெய்ட்டுனியா நகருக்கு செல்லும் வழியில் இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பாலஸ்தீன கைதிகளை ஏற்றிச் செல்லும் செஞ்சிலுவைச் சங்கப் பேருந்தின் நேரடி காட்சிகளை அல் – ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

மற்றொரு நிலவரத்தில் இஸ்ரேலுடன் ஒப்புக்கொண்ட நான்கு நாள் போர்நிறுத்தத்தை ஹமாஸ் தொடரும் என்று பாலஸ்தீன அரசதந்திரி ஒருவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!