Latestமலேசியா

15 லட்சம் ரிங்கிட்டுக்கு GOLD 1 கார் எண் பட்டையை ஏலத்தில் எடுத்து மாமன்னர் சாதனை

கோலாலம்பூர், பிப்ரவரி 20 – மிக உயரிய விலையில் கார் பதிவு எண் பட்டையை ஏலத்தில் எடுத்து, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்.

‘கோல்ட் 1’ என்ற அந்தச் சிறப்பு கார் எண் பட்டையை 15 லட்சம் ரிங்கிட்டுக்கு மாமன்னர் ஏலத்தில் எடுத்துள்ளார்.

அத்தகவலைத் தனது அதிகாரப்பூர்வ முக நூல் பக்கத்தில் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.

அந்த 15 லட்சம் ரிங்கிட் மத்திய அரசுக்கு போய் சேரும் என அவர் சொன்னார்.

மாமன்னர் அந்த ‘கோல்ட் 1’ பட்டையை ஏலத்தில் எடுத்திருப்பதை குறிக்கும் வகையில், அதன் மாதிரி எண் பட்டையைப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இஸ்தானா நெகாராவில் மாமன்னரிடம் நேரில் வழங்கினார்.

கூட்டரசு பிரதேச நாளின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவை ஒட்டி, சாலைப் போக்குவரத்துத் துறை ஜே.பி.ஜே அண்மையில் அந்த ‘கோல்ட் 1’ சிறப்பு எண் பட்டை தொடரை அறிமுகம் செய்து, அதனை ஏலத்தில் விட்டது.

அந்தப் பொன்விழாவைக் குறிக்கும் விதமாகவே ‘கோல்ட் 1’ என அதற்குப் பெயரிடப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!