Latestமலேசியா

மித்ராவை மீண்டும் ஒற்றுமை அமைச்சுக்கு மாற்ற மறைமுக வேலையா?

கோலாலம்பூர், டிச 14 – பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா ஒற்றுமை அமைச்சிலிருந்து பிரதமர் துறை அமைச்சின் கீழ் மாற்றம் கண்ட நிலையில், தற்போது மீண்டும் அதனை ஒற்றுமை அமைச்சின் கீழ் மாற்றுவதற்கான மறைமுக வேலைகள் நடப்பதாக அறியப்படுகிறது.

2014ஆம் ஆண்டு டத்தோ ஶ்ரீ நஜிப்பால் உருவாக்கப்பட்டு அப்போது செடிக் என்ற பெயரில் அழைக்கப்பட்ட மித்ரா, தொடங்கப்பட்டதிலிருந்தே பிரதமர் துறையின் கீழ் செயல்பட்டு வந்தது.

ஆனால் 2020ஆம் ஆண்டு அது திடிரென ஒற்றுமை அமைச்சின் கீழ் மாற்றப்பட்டது. அதனால் சமூகத்தின் பல்வேறு தரப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

ஒர் அமைச்சின் கீழ் செயல்படும்போது, மித்ராவின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இந்திய சமூகம் தொடர்பான தரவுகள் பெறுவதிலும் சுயேற்சையாக செயல்படுவதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.

பல்வேறு தரப்புகளிடமிருந்து மித்ரா மீண்டும் பிரதமர் துறை அமைச்சுக்கு மாற்றப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில், ம.இ.கா-வின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்கினேஸ்வரன் எடுத்த பெரும் முயற்சியின் அடிப்படையில் அப்போதைய பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஒப்புக் கொண்டு மிகக் குறுகிய காலத்தில் அது கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் பிரதமர் துறையின் கீழ் மாற்றப்பட்டது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு மித்ராவை மீண்டும் ஒற்றுமை அமைச்சின் கீழ் கொண்டுச் செல்ல பின்னணி வேலைகள் நடந்து வருவதாக அறியப்படுகிறது.

இது நடக்குமாயின், இந்திய சமூகத்திற்கு மிகப் பெரிய இழப்பாக அமைவதோடு மட்டுமல்லாமல், இந்திய சமூகத்தின் மீது தனி அக்கறை செலுத்துவதிலிருந்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒதுங்கப்பார்க்கிறாரா என்ற கேள்வியை எழுப்புகிறது.

அமைச்சரவை மாற்றத்தினால் ஏற்கனவே பெரும் ஏமாற்றத்தில் தள்ளப்பட்டிருக்கும் இந்திய சமூகத்திற்கு இது இன்னொரு பேரிடியா எனும் கேள்வி எழச்செய்கிறது.

ஏன் இந்த திடீர் மாற்றம், இதற்கு பின்னணி யார்? கடந்த தேர்தலில் 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட இந்தியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கின்ற அன்வாருக்கு இந்த தகவல் தெரியுமா அல்லது அவரின் உத்தரவின் பெயரில்தான் இந்த வேலைகள் நடக்கின்றனவா என பல்வேறு ஆருடங்களும் தற்போது வலுத்து வருகின்றன.

ஏன் இந்த திடீர் மாற்றம், இதற்கு பின்னணி யார்? கடந்த தேர்தலில் 80-க்கும் விழுக்காடு இந்தியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கின்ற அன்வாருக்கு இந்த தகவல் தெரியுமா அல்லது அவரின் உத்தரவின் பெயரில்தான் இந்த வேலைகள் நடக்கின்றனவா என பல்வேறு ஆருடங்களும் தற்போது வலுத்து வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!