Latestமலேசியா

பாலியல் தொந்தரவு; ஈப்போ HRPB பயிற்சி மருத்துவர்கள் முன்வந்து புகார் அளிக்குமாறு போலீஸ் அழைப்பு

ஈப்போ, மார்ச் 18 – பேராக், ஈப்போ, HRPB – ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில், மருத்துவரால் பாலியல் தொந்தரவுக்கு இலக்கான பயிற்சி மருத்துவர்கள், அது குறித்து முன் வந்து புகார் செய்யுமாறு போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

புகார் தொடர்பில் வெளிப்படையாகவும், சட்ட ரீதியாகவும் விசாரணை மேற்கொள்ள அது மிகவும் அவசியம் என ஈப்போ போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் யாஹ்யா ஹசான் கூறியுள்ளார்.

இதுவரை அவ்விவகாரம் தொடர்பில், “மொட்டை கடிதம்” எழுதிய நபரிடமிருந்தோ, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பயிற்சி மருத்துவர்களிடமிருந்தோ புகார் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்பதையும் யாஹ்யா உறுதிப்படுத்தினார்.

சமூக வளைத்தளங்களில் பகிர்வதை காட்டிலும், முறையாக போலீஸ் புகார் செய்வது சிறந்தது.

அதனால், பாதிக்கப்பட்டவர்கள் முன் வந்து புகார் அளிக்க வேண்டுமென யாஹ்யா கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர்களுக்கு எதிராக பாலியல் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் 43 வயதான ஆண் மருத்துவர் ஒருவரிடமிருந்து, இம்மாதம் 16-ஆம் தேதி தாம் புகார் ஒன்றை பெற்றதை, ஓர் அறிக்கையின் வாயிலாக யாஹ்யா உறுதிப்படுத்தினார்.

குறிப்பாக, எலும்பியல் துறையை சேர்ந்த அந்த மருத்துவர், பெண் பயிற்சி மருத்துவர்களின் பயிற்சி காலத்தை நீட்டிக்கப்போவதாக மிரட்டியதோடு, அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள “மொட்டை கடிதம்” ஒன்று முகநூலிலும், X சமூக ஊடகத்திலும் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!