Latestமலேசியா

இணைய மோசடி கும்பல் முறியடிப்பு தனித்து வாழும் தாயும் இளம் பெண்ணும் கைது

ஜோகூர் பாரு, பிப் 23 – இணைய மோசடி கும்பல் முறியடிக்கப்பட்டதை தொடர்ந்து தனித்து வாழும் தாயும் அவரது இளம் பெண்ணும் கைது செய்யப்பட்டனர். பல மாதங்களுக்கு முன்பு, நல்ல வருமானத்தை அளிக்கும் முதலீட்டுத் திட்டத்தில் மக்களை அழைத்து, அவர்களைப் பதிவு செய்யும் எளிதான வேலையில் இறங்கியபோது அவர்கள் இருவரும் மகிழ்ச்சியடைந்தனர். பல இல்லத்தரசிகள் உட்பட 200 க்கும் மேற்பட்ட மக்கள் நாடு தழுவிய அளவில் ஒரு முதலீட்டு மோசடியில் ஏமாற்றப்பட்டு, 2 மில்லியன் ரிங்கிட் இழக்க நேரிடும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் மற்றும் பேராக்கை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் ஜெலபாங்கில் ஒரு வீட்டைச் சோதனை செய்து, ஐந்து பெண்கள் மற்றும் “டெலிமார்க்கெட்டர்களை” பணியமர்த்திய மூளையாக இருந்தவர் உட்பட ஒன்பது பேரைக் கைது செய்தபோதுதான் அந்த மோசடி கும்பலின் செயல்படுகள் அம்பலமாகின.

அந்த சிறப்பு நடவடிக்கையில் பிடிபட்டவர்களில் 40 வயது தாயும் அவரது 17 வயது மகளும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனத்தின் பிரதிநிதிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் அந்த கும்பல் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களைக் கவர்ந்திழுப்பதாக கூறப்படுகிறது. அனைத்து பணமும் “BMS Providers Resources” என்ற நிறுவனத்தின் பெயரின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. 150 ரிங்கிட் போன்ற சிறிய முதலீடு செய்வதன் மூலம், 100 நாட்களுக்கு மேல் ஒரு நபர் RM1,000க்கு மேல் பெற முடியும் என்று மக்களுக்குச் சொல்வதே அவர்களின் செயல்பாடாகும் . பாதிக்கப்பட்ட பலர் இந்திட்டத்தில் 150 ரிங்கிட் முதல் 40,000 ரிங்கிட்வரை இழந்துள்ளனர். பணத்தை இழந்தவர்களில் பலர் ஜோகூரில் அந்த கும்பலுக்கு எதிராக புகார் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 9 சந்தேகப் பேர்வழிகள் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!