Latestமலேசியா

பதிவு நீக்கத்தை எதிர்த்து ஹிண்ட்ராப் செய்துகொண்ட சீராய்வு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

கோலாலம்பூர், ஜன 29 – பதிவு நீக்கத்தை எதிர்த்து சங்கத்தின் பதிவதிகாரி மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக ஹிண்ட்ராப் (Hindraf) செய்துகொண்ட சீராய்வு மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனினும் இந்த மனு தள்ளுபடி செய்வதற்கான காரணத்தை உயர் நீதிமன்ற நீதிபதி அமர்ஜிட் சிங் தெரிவிக்கவில்லை. சங்கங்களின் பதிவதிகாரி மற்றும் உள்துறை அமைச்சருக்கு செலவுத் தொகையாக 5,000 ரிங்கிட் செலுத்தும்படி ஹிண்ட்ராப்பிற்கு அமர்ஜிட் உத்தரவிட்டார். வழக்கறிஞர் அன்னூ சேவியர் ஹிண்ட்ராப்பிற்காக ஆஜரான வேளையில் மூத்த கூட்டரசு வழக்கறிஞர்லிவ் ஹார்ங் பின் சங்கப் பதிவதிகாரி மற்றும் உள்துறை அமைச்சரை பிரதிநிதித்தார்.

ஹிண்ட்ராப் இயக்கத்தின் பதிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து இரண்டு காரணங்கள் தொடர்பில் சீராய்வு மனுவை ஹிண்ட்ராப் சார்பில் அதன் தலைவராக இருந்த வேதமூர்த்தி தாக்கல் செய்திருந்தார். 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி ஹிண்ட்ராப்பின் பதிவை ரத்து செய்வது என சங்கங்களின் தலைமை இயக்குனரின் முடிவையும் ஹிண்ட்ராப்பின் முறையீட்டை நிராகரித்த உள்துறை அமைச்சரின் முடிவுக்கு எதிராகவும் முன்னாள் அமைச்சருமான வேதமூர்த்தி சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த இரு முடிவுகளும் சட்டவிரோதமானது என்பதோடு செல்லுபடியாகது என அறிவிக்கும்படி ஹிண்ட்ராப் வழக்கு தொடுத்திருந்து. ஹிண்ட்ராப் பதிவு ரத்து செய்ததது கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளுக்கு எதிரானது என கடந்த நவம்பர் மாதம் வேதமூர்த்தி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!