Latestமலேசியா

நோன்பு பெருநாள் மிதமாக கொண்டாடப்படும் ஸ்ரீ பெர்டானாவில் திறந்த இல்ல உபசரிப்பு இல்லை

கோலாலம்பூர், ஏப் 2 – பொது நிதியை சேமிக்கும் முடிவாக இவ்வாண்டு Seri Perdana வில் திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படாது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். அரசாங்க நிறுவனங்களும் தங்களது ஹரிராயா பெருநாளை ஆடம்பரமாக கொண்டாடக்கூடாது என இன்று காலையில் நிதியமைச்சில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றியபோது பிரதமர் இதனை தெரிவித்தார். சில வேளையில் நாம்கூட மறந்துவிடுவோம். நான் பிரதமராக இருந்தாலும் அரசாங்க பணம் எனது பணமாக இல்லையென்பால் அதனை செலவிடுவது நியாயமாக இருக்காது என்று அன்வார் கூறினார். எனது சம்பளத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு அரசாங்கப் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்தால் அதனால் என்ன பயன் என அன்வார் வினவினார்.

நானும் நோன்பு பெருநாள் கொண்டாடுவேன். ஆனால் மிதமாகவே பெருநாள் கொண்டாட்டம் இருக்கும். நோன்பு மாதத்தில் கிராமப்புறங்களில் உள்ள மக்களையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள எத்தனையோ குழந்தைகள் வசதியான வாழ்கையை அனுபவிக்க முடியாமல் இருக்கின்றனர். நாம் பணத்தை சேமித்து வைத்தால் மற்றவர்களின் நன்மைக்காக நாம் அதனை பயன்படுத்த முடியும். இதன் காரணமாகேவே இவ்வாண்டு நோன்பு பெருநாளை பெரிய அளவில் கொண்டாடவில்லையென தாம் முடிவு செய்ததாகவும் அமைச்சுகளின் நோன்பு பெருநாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வது போதுமானது என கருதுவதால் Seri Perdana வில் பெரிய அளவிலான நோன்பு பெருநாள் பொது உபசரிப்பை நடத்துவதில்லை என்று முடிவு செய்ததாக அன்வார் கூறினார். 2022 ஆம் ஆணடு டிசம்பர் மாதம் பிரதமராக பதவி ஏற்றது முதல் தொடர்ந்து இரண்டாவது முறையாக இவ்வாண்டும் ஸ்ரீ பெர்டானாவில் அன்வார் நோன்பு பெருநாளை கொண்டாடவில்லை. இதனிடையே அரசாங்க நிறுவனங்கள் சிக்கனமாக பணத்தை செலவு செய்ய வேண்டும் என அன்வார் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!