ஷா ஆலம், நவ 10 – ஷா அலாம் ,செக்சன் 27 இல் உள்ள வீடமைப்பு பகுதியில் மெதுநடை பயிற்சியில் ஈடுபட்ட ஆடவர் ஒருவர் வழிப்பறி கொள்ளையின்போது தாக்கப்பட்டதால் காயம் அடைந்தார். பாதிக்கப்பட்ட 30 வயதுடைய ஆடவர் அதிகாலை 5.50 மணியளவில் உடற்பயிற்சி மற்றும் மெது நடையில் ஈடுபட்டவரிடம் மோட்டார் சைக்கிள் வந்த நபர் கொள்ளையடிக்க முயன்றதாக ஷா அலாம் OCPD துணை கமிஷனர் முகமட் இக்பால் இப்ராஹிம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். சந்தேக நபர் கத்தியைக் காட்டி, பாதிக்கப்பட்டவரின் பையைப் பறிக்க முயன்றார். கொள்ளையனிடம் போராடியதால் அந்த நபர் காயம் அடைந்ததைத் தொடர்ந்து ஷா அலாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இச்சம்பவம் குறித்து புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருவதாக முகமட் இக்பால் கூறினார்.
Check Also
Close