Latestமலேசியா

வாடிக்கையாளர்கள் புகைப்பிடித்தால், உணவக நடத்துநர்களுக்கு அபராதமா ? PRESMA கேள்வி

கோலாலம்பூர், மார்ச்-8, உணவகங்களில் வாடிக்கையாளர்கள் புகைப்பிடித்தால், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை சுகாதார அமைச்சு KKM மறு ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்லி அஹ்மாட்டை நேரில் சந்தித்து மலேசிய முஸ்லீம் உணவக நடத்துனர் சங்கம் PRESMA அக்கோரிக்கையை வைத்துள்ளது.

KKM-மின் அந்நடைமுறை PRESMA-வின் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அதன் உதவித் தலைவர் தாஹீர் சலாம் சொன்னார்.

உணவக வளாகங்களில் புகைப்பிடிப்பதில் இருந்து வாடிக்கையாளகளைத் தடுக்க உணவக நடத்துநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை; அப்படியே செய்தாலும் வாடிக்கையாளர்கள் சண்டைக்கு வருவார்கள் என தாஹீர் சுட்டிக் காட்டினார்.

இப்படி ஒரு தர்மசங்கடமான நிலைமை தங்களுக்கு நியாயமானதாக இல்லை எனக் கருதும் உணவக நடத்துனர்களின் ஆதங்கம் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்ட அமைச்சர், கூட்டு நன்மைக்காக ஒரு நல்ல பதிலைத் தருவார் என PRESMA எதிர்ப்பார்ப்பதாக தாஹீர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!