Latestமலேசியா

புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் விடியற்காலையில் தீ வைக்கப்பட்டதாக போலீஸ் சந்தேகம்

கோலாலம்பூர், ஜன 10 – புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ங்கே கூ ஹம் வீட்டில்  இன்று அதிகாலை  மணி 2.50 அளவில் தீ ஏற்பட்டதற்கு குற்றவியல் அம்சம் காரணமாக இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ங்கே கூ ஹம் வீட்டில் தீ வைக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தை பேரா போலீஸ் தலைவர் யுஸ்ரி ஹசன் பஸ்ரி  உறுதிப்படுத்தினார்.  இத்தீவிபத்தில்  மெர்சிடிஸ் E300 உட்பட மூன்று கார்கள்  80 விழுக்காடு அழிந்தன . ஹோண்டா CRV  மற்றும்  டொயோட்டா ஹிலக்ஸ் வாகனங்கள் மற்றும் வீட்டின் கூரைப்பகுதியும் சேதமடைந்தன.  இச்சம்பவம் நடந்தபோது  தாமும் தமது மனைவியும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததாகவும் வழிப்போக்கர்கள்  வீட்டின் மணியடித்து ஒலியெழுப்பியதால் தாம்  தூக்கத்திலிருந்து விழித்தாக ங்கே கூ ஹம் தெரிவித்தார். 

ங்கே கூ ஹம் வீட்டில் ஏற்பட்ட தீச்சம்பவம் குறித்து  விசாரணை நடத்தப்படுவதாகவும் எனினும்  இது ஒரு சதிநாச வேலை என்பதை மறுக்க முடியாது என  பேரா  தீயணைப்பு மீட்புத்துறையின் இயக்குனர் சயானி  சைடன் தெரிவித்தார். மோப்ப நாய்களின் துணையோடு தடயயியல் அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபடும்படி  தாங்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.  அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!