Latestமலேசியா

ஜோகூரில் லாபிசிலுள்ள ஆறுகளில் 18 ஆண்டுகளுக்குப் பின்னரும் ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது

லாபிஸ், ஜன 18 – 2006 ஆம் ஆண்டு அலுமினிய கழிவுகள் கொட்டப்பட்டதால் லாபிஸில் பாதிக்கப்பட்ட பல ஆறுகளின் நீரின் தரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட நான்கு ஆண்டு கால ஆய்வில் இன்னமும் அவற்றில் ரசாயன அம்சங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மலாயா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், ஆறு இடங்களில் சேகரிக்கப்பட்ட தண்ணீர் மாதிரிகளில் பாஸ்பரஸ் (phosphorus), தாமிரம் (copper) மற்றும் மாங்கனீஸ் (manganese) செறிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

ஆறுகள் மற்றும் கிணறுகளில் இருந்து நேரடியாக தண்ணீர் குடிக்க வேண்டாம் என கிராம மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், துப்புரவு, நீர்ப்பாசனம் மற்றும் நடவு நோக்கங்களுக்காக தண்ணீர் குடிப்பதற்குப் பயன்படுத்தப்படலாம் என்று ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய மலாயா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்வி பிரிவைச் சேர்ந்த டாக்டர் டாக்டர். ஃபாத்தியா முகமட் ஸுகி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!