Latestமலேசியா

இ-மடானி உதவித் திட்டத்திற்காக 65 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு; 65 லட்சம் பேர் பயனடைவார்கள்

புத்ராஜெயா, டிசம்பர் 6 – இதுவரை மொத்தம் 65 லட்சம் இ-மடானி விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு, தகுதியானவர்களின் கணக்கில் அந்த உதவித் தொகை சேர்க்கப்பட்டுள்ளது.

அதற்காக அரசாங்கம் இதுவரை மொத்தம் 65 கோடி ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளதாக, நிதி துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் மஸ்லான் தெரிவித்தார்.

இன்னும் 18 லட்சம் இ-மடானி விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

அந்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து, ஒன்று முதல் ஐந்து நாட்களில் பரிசீலிக்கப்பட்டு முடிவு வெளியிடப்படும் எனவும் அஹ்மாட் மஸ்லான் சொன்னார்.

தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், emadani@treasury.gov.my அக்கப்பக்கம் வாயிலாக அல்லது 03-88824565, 1800882747 என்ற எண்களில் தொடர்புக் கொண்டு மேல் முறையீடு செய்யலாம்.

இவ்வேளையில், முதல் முறை அந்த உதவித் தொகையை பெறுவதில் தோல்விக் கண்டவர்கள், அங்கீகாரம் வழங்கப்படாத இ-வெல்லட் நடத்துனர்கள் வாயிலாக மீண்டும் செய்யும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் அஹ்மாட் மஸ்லான் நினைவுறுத்தினார்.

மே பேங்க் வங்கியின் MAE செயலி, Touch ‘N Go, Shopee அல்லது பெட்ரோனாஸ் Steel வாயிலாக இ-மடானி உதவித் தொகைக்காக விண்ணப்பம் செய்யலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!