Latestமலேசியா

OPR வட்டி விகிதம் நிலைநிறுத்தப்படுமா?

கோலாலம்பூர், நவம்பர் 3 – 2024 OPR – வங்கிகளுக்கு இடையிலான வட்டி விகிதத்தை, பேங் நெகாரா 3.0 விழுக்காடாக நிளைநிறுத்தும் என, பொருளாதார ஆய்வாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே, நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்க ஏதுவான விகிதத்தில் OPR வட்டி விகிதம் உள்ளதால், ஆய்வாளர்கள் அந்த கணிப்பை வெளியிட்டுள்ளனர்.

அரசியல் நெருக்கடிகள், பொருட்களின் விலையேற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்டிருக்கும் சவால்கள் ஆகியவற்றுக்கு மத்தியில், அடுத்தாண்டு மேலும் சவாலான ஆண்டாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எனினும், உள்நாட்டு பொருளாதாரம், நிலையான உள்நாட்டு தேவையுடன், மீட்சிப் பெறும் தன்மையுடன் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பணவீழ்ச்சி விகிதம் மற்றும் சவாலான வெளிப்புறச் சூழல் ஆகியவை, 2024-ஆம் ஆண்டு முழுவதும், OPR – வங்கிகளுக்கு இடையிலான வட்டி விகிதத்தை தொடர்ந்து நிலைநிறுத்துவதில் பேங் நெகாராவுக்கு சவாலை இருக்கலாம் என கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!