Latestமலேசியா

வர்த்தகத்தில் வெற்றி பெற்றதால் என் கணவரை அநியாயமாக பழிவாங்குவதா? டைய்ம் மனைவி குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜன 10 – தம் கணவர் வர்த்தகத்தில் வெற்றி பெற்றதால் அவரை அரசாங்கம் அநியாயகமாக பழிவாங்குகிறது என முன்னாள் நிதியமைச்சர் டைய்ம் ஜைனுடினின் மனைவி நைமா காலித் குற்றஞ்சாட்டினார். கடந்த கால அரசியல் தகராறுகளை தீர்ப்பதற்கு தனி நபரின் கௌவரத்தை அரசாங்கம் சீர்குலைக்கக்கூடாது என அவர் கேட்டுக் கொண்டார். 1984ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதற்கு முன்னதாகவே வெற்றி பெற்ற வர்த்தகர் டைய்ம் என்பது பொதுமக்களுக்கு தெரியும் . 40 ஆண்டுகளுக்கு முன் அரசாங்கத்தில் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே அவர் வெற்றிபெற்ற சொத்துடமையாளர் மற்றும் கோடிஸ்வரர் என ஊடகங்கள் பெரிய அளவில் சுட்டிக்காட்டியுள்ளதையும் நைமா காலித் சுட்டிக்காட்டினார்.

டைய்ம் கோடிஸ்வரராக இருப்பதால் அவர் லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டது போன்ற தோற்றம் இப்போது ஏற்படுத்துவதற்கு திட்டமிட்ட பொய்த் தகவல்கள் பரப்பப்படுவது ஏற்புடையதாக இல்லையென இன்று MACC தலைமையகத்திற்கு முன் செய்தியாளர்களிடம் பேசியபோது நைமா காலித் கூறினார். அதோடு எந்தவித ஆதரமும் இன்றி டைய்ம் சட்டவிரோதமாக பணம் சேர்த்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் அடிக்கடி கூறிவருவதாகவும் அவர் தெரிவித்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!