Latestமலேசியா

பாடு பதிவு ; இன்னும் எதிர்பார்த்த அளவில் இல்லை

கோலாலம்பூர், பிப்ரவரி 20 – ஜனவரி இரண்டாம் தேதி அறிமுகம் கண்ட பாடு ஒங்கிணைக்கப்பட்ட தரவுத் தளத்தில், இதுவரை நாட்டிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 16 விழுக்காட்டினர் மட்டுமே பதிந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஏழு வாரங்களில், அந்த தரவுத் தளத்தில் பதிந்து கொண்டவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவில் இல்லை என கூறப்படுகிறது.

அதற்கு ஒன்பது காரணங்களை, பொருளாதார வல்லுனர்கள் முன் வைத்துள்ளனர்.

நீண்ட கால அவகாசம் தேவைப்படுவது, அதிகமான தகவல்களை நிரப்ப வேண்டியுள்ளது ஆகியவை பலர் அந்த தரவுத் தளத்தில், பதிந்து கொள்ள தாமதிக்கிறார்கள் அல்லது மறுக்கிறார்கள் என புத்ரா பிசினஸ் ஸ்கூலின் பொருளாதார விரிவுரையாளர், இணைப் பேராசிரியர் டாக்டர் அஹ்மாட் ரஹ்மான் அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

எனவே, பதிவு நடவடிக்கையை அதிகரிக்க, வெகுமதி மற்றும் தண்டனை அணுகுமுறை இருக்க வேண்டும். பதிந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் அல்லது அதிர்ஷ்ட குலுக்கள் சலுகைகள் வழங்கப்படலாம். அவ்வாறு செய்யத் தவறும் தரப்பினருக்கு, அரசாங்க உதவிகள் கிடைக்காது என்ற அறிவிப்பு கவனத்தை ஈர்க்கலாம் என ரஹ்மான் சொன்னார்.

இவ்வேளையில், குறைவான பதிவிற்கு, சமூக பொருளாதார அம்சமும் ஒரு காரணம் என, UiTM வணிக மற்றும் நிர்வாக மூத்த விரிவுரையாளர் டாக்டர் முஹமட் இதாம் மாட் ரசாக் கூறியுள்ளார்.

தொழில்நுட்பம் அல்லது இணைய சேவை அணுகல், பாடு மீதாம விழிப்புணர்வு இல்லாமை, மொழித் தடைகள், இணைய பதிவு நடவடிக்கை மீதான மாறுபட்ட கண்ணோட்டம், வயது, கல்வி, இருப்பிடம் ஆகியவையும் அதற்கு காரணமாக இருக்கலாம் என்பதை முஹமட் இத்தாம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால், பாடு தரவுத் தளம் மீதான விழிப்புணர்வை அதிகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் வரையில், நாட்டிலுள்ள 35 லட்சத்து 60 ஆயிரம் பேர் மட்டுமே பாடு தரவுத் தளத்தில் பதிந்து கொண்டுள்ள வேளை ; அதில் பெரும்பாலானோர் சிலாங்கூர், சரவாக் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

அரசாங்க பணியாளர்கள் பாடுவில் பதிந்து கொள்வதற்கான இறுதி நாள் கடந்த வியாழக்கிழமையுடன் நிறைவடைந்த வேளை ; அரசாங்க பணியில் இல்லாதவர்களுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!