Latestமலேசியா

இந்திய – சீன பிரஜைகளை விசாவின்றி நாட்டில் நுழைவற்கு அனுமதிக்கும் முடிவு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்

கோலாலம்பூர், டிச 19 – இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த பிரஜைகளை விசாவின்றி நாட்டில் நுழைவதற்கு அனுமதிப்பதற்கு மலேசியா எடுத்த முடிவு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு பெரும் துணையாக இருக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்தியாவும் சீனாவும் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக விளங்குவதால் அந்நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் மலேசியாவில் தங்கியிருப்பதற்கு 30 நாள் விசா விலக்கு அளிக்கப்பட்டிருப்பது உள்நாட்டில் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் என பேங்க் மூவலமாட் ‘Bank Muamalat’ பொருளாதார தலைவர் அப்ஸானிஜாம் அப்துல் ரஷீத் தெரிவித்தார்.

சுற்றுப்பயணிகள் செலவிடும் தொகையில் ஒரு விழுக்காடு அதிகரித்தாலும் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 1.4 விழுக்காடு உயரும் என அவர் கூறினார்.

வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் பொதுவாகவே பொருட்களை வாங்குவதற்கு 33.6 விழுக்காடு தொகையை ஒதுக்குவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்திய மற்றும் சீன சுற்றுப்பணிகளின் வருகை அதிகரிப்பதும் மற்றும் அவர்கள் இங்கு தங்கியிருக்கும் காலத்தில் செலவு செய்யும் தொகை பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கை ஆற்றும் என சரவா Matta உதவித் தலைவர் மோக் வெனியா ‘Mok Venia’ ஒப்புக்கொண்டார்.

இந்தியா, சீனா உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளின் வரவு இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்பதால் இவ்வட்டாரத்திலுள்ள இதர அண்டை நாடுகளுடன் மலேசியாவின் போட்டா போட்டியிடும் ஆற்றலும் அதிகரிக்கும் என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!