Latestஉலகம்

உலகின் 12ஆவது பணக்கார பெண்ணாக ஃபிராங்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ்; 100 பில்லியன் டாலர் செல்வம் வைத்துள்ள முதல் பெண்

டிச, 29 –  ஃபிராங்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் என்பவர் உலகின் 100 பில்லியன் டாலர் செல்வம் வைத்திருக்கும் முதல் பெண் ஆவர்.

2017இல் அவரது தாயார் லிலியன் பெட்டன்கோர்ட் காலமானதை தொடர்ந்து, அவரின் பெரும் செல்வத்தை பரம்பரை மூலமாகப் பெற்றார் இவர். அவர் ஒரே மகள் என்னும் நிலையில், இப்போது அவரின் தாத்தாவால் நிறுவப்பட்ட அழகுசாதன நிறுவனமான லோரியல் ‘L’Oreal’இன் தலைவராக உள்ளார்.

1998இல், நிறுவப்பட்ட அழகுசாதன நிறுவனமான ‘L’Oreal’ லோரியல்யின் பங்கு சந்தை உயர்ந்ததை தொடர்ந்து, நேற்று 100.1 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இதனிடையே இவர் உலகின் 12ஆவது பணக்காரர் இடத்தை பிடித்துள்ளார்.

தொற்று காலக்கட்டத்தில் வீட்டில் முடங்கியிருந்த நிலையில் அதிகமானோர் ஒப்பனைகளை பயன்படுத்தாத காரணத்தால் இவரின் நிறுவனம் பின்னடைவுகளை சந்திக்க நேர்ந்தது. இருப்பினும், இவ்வருடம் வாடிக்கையாளர்கள் ஆடம்பரப் பொருட்களுக்கு அதிக வரவேற்பை கொடுத்த நிலையில், பங்குகள் 35% வரை உயர்ந்துள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!