Latestமலேசியா

மித்ரா வளர்ப்பு பிள்ளையைப்போல் நடத்தப்படுகிறது முன்னாள் -எம்.பி சார்லஸ் கூறுகிறார்

கோலாலம்பூர், ஏப் 4 – மித்ரா எனப்படும் மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளிப்படையான உறுதியற்ற தன்மையினால் அந்த அமைப்பு ஒரு வளர்ப்பு குழந்தை போல் நடத்தப்படுவதாக கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் Charles Santiago தெரிவித்திருக்கிறார்.
2018 முதல் மித்ராவை பிரதமர் துறையிலிருந்து தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகத்திற்கு தொடர்ந்து மாற்றுவது மலேசிய இந்திய சமூகத்தை அவமதிப்பதாக இருப்பதாக அவர் கூறினார். மித்ரா வளர்ப்புப் பிள்ளை போல நடத்தப்படுகிறது. யாரும் அதில் முழு பொறுப்புணர்வோடு செயல்படும் உணர்வையும் கொண்டிருக்கவில்லை . மித்ரா மீது அதிகமான மக்கள் இப்படி முன்னும் பின்னுமாக நம்பிக்கை இழக்கிறார்கள். இது இந்திய சமூகத்தில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையின்மைக்கு வழிவகுக்கிறது என்று DAP யின் முன்னாள் எம்.பியுமான Charlse Santiago தெரிவித்தார். இந்த இடமாற்றங்கள் மித்ராவின் செயல்பாடுகளை பாதிக்கும் என்றும், அதன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் நேரத்தில், அது மிகவும் தாமதமாகிவிடும் என்றும் அவர் கூறினார்.

குறைந்த வருமானம் பெரும் தரப்பான பி 40 இந்தியர்களை மேம்படுத்துவதே மித்ராவின் தொடக்க நோக்கமாக இருந்தது. மலேசிய இந்திய புளூபிரிண்ட் எனப்படும் இந்தியர்களுக்கான பெரும் திட்டம் இப்போதுள்ள சிக்கல்களையும் அவற்றைத் தீர்ப்பதற்கான வியூகங்களையும் தெளிவாக காட்டியுள்ளது. ஆனால் அந்த பெருந்திட்டம் இன்னும் அமல்படுத்தப்படாமல் இருப்பது துரதிஷ்டவசம் என Charles Santiago தெரிவித்தார். மித்ராவை பிரதமர்துறை அலுவலகத்திற்கும் ஒற்றுமைத்துறை அமைச்சிற்கும் முன்னும் பின்னுமாக மாற்றுவது சமூகத்தின் உரிமையை எடுக்கக்கூடிய இந்திய தலைமையில் எவரும் இல்லையென்பதை காட்டுகிறது என அவர் சுட்டிக்காட்டினார். மித்ரா மீண்டும் பிரதமர்துறை அலுவலகத்தின் கீழ் செயல்படும் என ஒன்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் Fahmi Fadzil நேற்று தெரிவித்திருந்தது தொடர்பில் கருத்துரைத்தபோது Charles Santiago இத்தகவலை வெளியிட்டார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் Aaron Ago Dagang கும் இந்த முடிவை எடுத்ததாக Fahmi நேற்று தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!