Latestஇந்தியா

எல்-1 புள்ளியை சென்றடைந்தது, இந்தியாவின் ஆதித்யா எல்-1 விண்கலம்

இந்தியா, ஜன 7 – சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், நேற்று எல்-1 புள்ளியை வெற்றிகரமாகச் சென்றடைந்துள்ளது.

எல்-1 என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான ஒரு குறிப்பிட்ட லாக்ரேஞ்ச் பாயிண்ட் (Lagrange Point) என்ற இடமாகும்.

எல்-1 எனும் அவவிடத்திலிருந்து எவ்வித குறிக்கீடும் இன்றி சூரியனை ஆய்வு செய்ய முடியும்.

இதுவரை , சூரியன் பற்றிய ஆராய்ச்சிக்கு அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் மட்டுமே விண்கலங்களை அனுப்பியுள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள X பதிவில், “இந்தியா மற்றொரு புதிய மைல் கல்லை அடைந்துள்ளது.

சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக அதன் இலக்கை அடைய, விஞ்ஞானிகளின் கடின உழைப்பே சான்றாகும்’ என்று புகழாரம் சூட்டி பதிவிட்டுள்ளார்.

மேலும், மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புது எல்லைகளை அடைவதற்கு நாம் தொடர்ந்து பணியாற்றுவோம் எனவும் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!