Latestமலேசியா

செராசில் ’அடாவடி’ e-hailing ஓட்டுநரைத் தாக்கிய மூவர் கைது

செராஸ், மார்ச்-12 – பிப்ரவரி 26-ஆம் தேதி தாமான் புக்கிட் செராசில் e-hailing ஓட்டுநரைத் தாக்கிய மூவர் பிடிபட்டுள்ளனர். அம்மூவரும் கோலாலம்பூர் சுற்று வட்டாரங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை கைதுச் செய்யப்பட்டதை, செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் சாம் ஹலிம் ஜமாலுடின் உறுதிப்படுத்தினார். 38 முதல் 43 வயதுக்கு இடைப்பட்ட அம்மூவரையும், தாக்கப்பட்ட ஓட்டுநர் அடையாளம் காட்டியதை அடுத்து, அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி 29-ஆம் தேதி வைரலான சம்பவ வீடியோவின் துணையுடன் சந்தேக நபர்களை போலீஸ் தேடிப் பிடித்தது. தாக்கப்பட்ட அந்த e-hailing ஓட்டுநர், சம்பவத்திற்கு முன்பாக காரை பின்னால் எடுக்கும் போது மோட்டார் சைக்கிளோட்டியை மோதியுள்ளார். இதனால் சினமடைந்ந அந்த மோட்டார் சைக்கிளோட்டி, தனது நடு விரலை ஆபாச சைகையாகக் காட்டி விட்டு நகர்ந்தார்.

சற்று நேரத்தில் அருகில் அங்காடி கடையில் இருந்து வந்த மூன்று ஆடவர்கள், e-hailing ஓட்டுநர் காயமடையும் அளவுக்கு அவரைச் சரமாரியாகத் தாக்கினர். “எப்படி நீ அந்த மோட்டார் சைக்கிளோட்டியிடம் அடாவடியாக நடந்துக் கொள்ளலாம்?” எனக் கேட்டு திட்டியுமிருக்கின்றனர். கடைசியில் அங்கிருந்த பொதுமக்கள் தலையிட்டு சண்டையை விலக்கி விட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!