Latest

வலுவான நீரோட்டம், சேறும் சகதியுமான ஆழ்கடல் பரப்பு ; அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரின் கறுப்பு பெட்டியை தேடும் பணிகளை கடினமாக்கியுள்ளது

கோலா சிலாங்கூர், மார்ச் 28 – மார்ச் ஐந்தாம் தேதி, கோலா சிலாங்கூர், அங்சா தீவின் கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்ட AW139 ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை கண்டுபிடிப்பதில், மலேசிய கடற்படை அமலாக்க நிறுவனம் கடினமான சூழலை எதிர்நோக்கியுள்ளது.

அதற்கு, சம்பவ இடத்தில் காணப்படும் வேகமான நீரோட்டம் மற்றும் சேறும் சகதியுமாக காணப்படும் ஆழ்கடலே காரணம் என கூறப்படுகிறது.

அதனால், பார்க்கு தூரம் குறைந்துள்ளதால், ஆழ்கடலில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தமது 21 முக்குழிப்பு வீரர்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக, மலேசிய கடற்படை தலைமை இயக்குனர் டத்தோ ஹமிட் முஹமட் அமின் தெரிவித்தார்.

“பிங்கர்” சமிக்ஞையின் அடிப்படையில், கருப்பு பெட்டியை தேடும் பகுதி, 50 முதல் 100 மீட்டர் சுற்றளவுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம், ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கிய பகுதியில், சுமார் 700 முதல் 800 மீட்டர் ஆழத்தில் அந்த கருப்பு பெட்டி இருப்பதாக, அரச மலேசிய கடற்படையின், தேசிய ஹைட்ரோகிராபிக் மையத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் காட்டுகின்றன.

அதனால், கூடிய விரைவில் அந்த கருப்பு பெட்டியை மீட்டு விட முடியும் எனும் நம்பிக்கையில் கடற்படை இருப்பதாக ஹமிட் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!