Latest

மனிதருக்கு பன்றியின் சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது -அமெரிக்க மருத்துவர்கள் சாதனை

போஸ்டன், மார்ச் 22- மனிதருக்கு பன்றியின் சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட சிறுநீரக பாதிப்பை எதிர்நோக்கியிருந்த Rick Slayman என்ற 62 வயது ஆடவருக்கு , மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் முதல் முறையாக பொருத்தப்பட்டதாக அமெரிக்காவில் போஸ்டனில் உள்ள Massachusetts (மஸ்ஸாசூசெட்ஸ்) பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். நான்கு மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட அந்த அறுவை சிகிச்சை 16ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய மருத்துவர்கள், நோயாளிகளுக்கு தயார் நிலை உடல் உறுப்புகளை வழங்கும் முயற்சியில் இதுவொரு மகத்தான சாதனை என வருணித்தனர். தற்போது Rick Slayman நன்கு குணமடைந்து வருவதாகவும் விரைவில் அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார் என்றும் மருத்துவமனை அறிக்கை ஒன்றில் கூறியது. மிருக அவயத்தை மனிதருக்கு பொருத்தும் இந்த முன்னுதாரண அறுவை சிகிச்சையின் நீண்ட கால விளைவுகளை கண்டறிய நிபுணர்கள் ஆர்வமுடன் உள்ளதாக சிறுநீரக மற்றும் கணைய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

ஏழு ஆண்டுகளாக டயாலிசிஸ் எனப்படும் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சையைப் பெற்று வந்த Rick Slaymanனுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் அந்த சிறுநீரகமும் செயலிழந்ததைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் டயாலிசிஸ் சிகிச்சை தொடரப்பட்டது. சிறுநீரகத்தைப் பெறும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஜீன்களை அகற்றுவதற்கு ஏதுவாக அந்த பன்றி மரபணு ரீதியாக மாற்றம் செய்யப்பட்டது. மேலும் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களையும் அந்நிறுவனம் பன்றியிலிருந்து அகற்றியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!