Latestமலேசியா

கோலா குபு பாரு இடைத்தேர்தலை புறக்கணிக்கும்படி சில தரப்பினர் இந்தியர்களை வற்புறுத்துகின்றனர் – பாப்பாராயுடு கண்டனம்

ஷா அலாம், ஏப் 18 – அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் Kuala Kubu Bharu சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிக்குமாறு இந்திய வாக்காளர்களை சில தரப்பினர் வற்புறுத்துவது குறித்து சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் Paparaidu கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்த குழுக்கள் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வருவதாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டதோடு அவை எதிர்க்கட்சிகளுக்கு நட்பாக இருப்பதாகக் கூறினார். சில இந்தியத் தலைவர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர் என்பதால் அவர்களின் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இத்தகைய நடவடிக்கையை அவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான Paparaidu கேட்டுக்கொண்டார்.

இந்தியர்களை வாக்களிக்க வேண்டாம் என்று அவர்கள் கூறிவருவது குறித்து தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் ஒரு ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது ஒருவரின் அடிப்படை உரிமையாக இருக்கும்போது அவர்களை வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவது எந்த வகையில் நியாயம் என அவர் வினவினார். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருப்பதாகவும் கோலாகுபு பாரு இந்திய சமூகத்தினர் இத்தகைய கோரிக்கையை புறக்கணிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!