Latestமலேசியா

கவர்ச்சிகரகமான சம்பளம் கிடைக்கும் என நம்பிய மலேசியர் மியன்மாரில் பிணையாளியாக அனுபவித்த பயங்கரம்

கோலாலம்பூர், ஜன 6 – கவர்ச்சிகரமான சம்பளம் கிடைக்கும் என்ற முகநூல் விளம்பரத்தை நம்பி ஏமாந்த ஒருவர் மியன்மாரில் பிணையாளியாக வைக்கப்பட்ட கொடுரத்தை அனுபவித்துள்ளார். இரக்கமற்ற வெளிநாட்டு கும்பல்கள்   விரித்த வலையில்  விழுந்த அதிகமான மலேசியர்கள் கவர்ச்சிகரமான  சம்பளம் பெற வேண்டும் என்ற சிந்தனையினால்  தொடர்ந்து  பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.   இவர்களில் பலர் கட்டாய வேலைகளைச் செய்வதையோ அல்லது பிணைப் பணத்திற்காக பிணையாக  தடுத்து வைக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகின்றனர்.  அண்மையில்  மியான்மாரில் மனித கடத்தல் கும்பலின் பாதிப்புக்கு உள்ளாகுவோம் என   மலேசியர் ஒருவர் எதிர்பார்க்கவில்லை.  அவருக்கு அந்த நாட்டில் 7,000  ரிங்கிட் வரை வருமானம் கிடைக்கும் என்ற வேலை இருப்பதாக  உறுதியளிக்கப்பட்டது.  

அவர் அங்கு சென்றடைந்தபோது அங்கு பணையக்கைதியாக மாறினார். அவரது நிலைமையை மேலும் மோசமாக்க ஒரு கும்பல்  அவரை விடுவிக்க மலேசியாவில் உள்ள அவரது குடும்பத்திற்கு 50,000 அமெரிக்க டாலர் அல்லது 230,000 ரிங்கிட்டை கோரியது. அவர்களால் பணம் செலுத்த முடியாவிட்டால், அவரை விடுவிப்பதற்கு ஈடாக வேறு இரண்டு நபர்களைக் கண்டுபிடித்து வலையில் சிக்க வைக்க வேண்டும் என்று அடாம் என்பவருக்கு  நெருக்குதல் கொடுக்கப்பட்டதாக அவரது சகோதரர் தெரிவித்தார்.  34 வயதுடைய அடாம் வேலை வாய்ப்பு மோசடி கும்பலின் திட்டத்தை உணராமல் விளம்பரத்தில் பட்டியலிடப்பட்டிருந்த முகவரைத் தொடர்பு கொண்டார்.

அவர்கள்  உடனடியாக அவருக்கு தாய்லாந்தின் பாங்காக்கிற்கு விமான டிக்கெட்டை அனுப்பினர். அவர் அங்கு சென்றதும், ஒரு ஓட்டுனரால்  மியான்மார் எல்லைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போதும், தான் ஏமாற்றப்படுவது அவருக்குத் தெரியவில்லை. பிறகு, இரண்டாவது நாளில், அவர் ஒரு ஆற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார், மறுகரைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டார். அப்போதுதான் அடாம் வேலை வாய்ப்பு கும்பல் மூலம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் என்று  மலேசிய அனைத்துலக மனிதாபிமான அமைப்பு ஏற்பாடு செய்த செய்தியாளர் கூட்டத்தில் அவரது சகோதரர் இதனை கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!