Latestமலேசியா

நிரந்தரமாக கடப்பிதழை பெறும் Naimahவின் மனு தள்ளுபடி

கோலாலம்பூர், மார்ச் 22 – கடப்பிதழை நிரந்தரமாக பெறுவதற்காக Toh Puan Naimah Abdul Khalid செய்திருந்த வழக்கு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. Na’imah வின் கடப்பிதழ் தொடர்பில் செஷன்ஸ் நீதிமன்றம் அமல்படுத்திய கூடுதல் நிபந்தனையில் நீதி மறுக்கப்படவில்லையென உயர் நீதிமன்ற நீதிபதி Ahmad Bache தெரிவித்தார். செஷன்ஸ் நீதிமன்றத்தின் முடிவு சட்டவிரோதமாகவோ அல்லது தவறாகவோ இல்லை. அனுமதிக்கப்பட்ட விதிமுறைக்கு ஏற்பவே அந்த முடிவு இருப்பதாக அவர் கூறினார். பாதுகாப்பு காரணங்களுக்காக கடப்பிதழை நீதிமன்றங்கள் முடக்குவது ஆக்கப்பூர்வமானது என்றே தாம் கருதுவாக Ahmad Bache கூறினார். நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள Na’imahவின் கணவர் Tun Daim Zainuddin னுக்கு எதிராக செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும் அவர் தமது கடப்பிதழை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை நிதிபதி சுட்டிக்காட்டினார்.

Na’imah வின் கடப்பிதழ் ஒப்படைக்கப்பட்டால் கணவன் மனைவி இருவருமே நாடு திரும்பாமல் வெளிநாட்டிலேயே இருக்கும் சாத்தியம் இருப்பததையும் நீதிபதி தெரிவித்தார். மேலும் திட்டமிட்ட நாளில் விமான பயணங்களிலும் பாதிப்பு இருப்பதால் தங்களது குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணையில் உடனடியாக கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையையும் அவர்கள் எதிர்நோக்கும் சாத்தியம் இருப்பதையும் நீதிபதி மறுக்கவில்லை. துன் டைய்ம் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்திற்கு வருவதை உறுதிப்படுத்தும் வகையிலேயே செஷன்ஸ் நீதிமன்றத்தின் முடிவு இருப்பதாக நீதிபதி Ahmad Bache தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!