Latestமலேசியா

மலேசியாவை பீடித்துள்ள ‘பிரிவினை வைரஸை’ வேர்றப்பதே என் முக்கியப் பணி – மாமன்னராக வரப்போகும் ஜோகூர் சுல்தான்

ஜோகூர், நவ 22 – மலேசியாவை பீடித்துள்ள ‘பிரிவினை’ எனும் வைரஸை அகற்றுவதே என் முக்கியப் பணி என சூருளைத்துள்ளார் நாட்டின் 17வது மாமன்னராக வரப்போகும் ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம்..

தனது முக்கியப் பணி நாட்டின் 33 மில்லியன் மக்களை பாதுகாப்பதே தவிர 222 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்ல என அடுத்தாண்டு ஜனவரி 31ஆம் திகதி பேரரசராக பதவியேற்கவிருக்கின்ற அவர் தெரிவித்தார்.

அரசியல் தலைவர்களால் உருவாகியிருக்கின்ற அந்த வைரஸ், தாங்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், சுயநலத்திற்காகவும், சண்டை போடுவதற்கும், பிறரை அவமானப் படுத்துவதற்கும், அவதூறு பரப்புவதற்கும், ஒற்றுமையை சீர்குழைப்பதற்கும் தயாராக இருப்பதாக தனது 65வது பிறந்தநாளை ஒட்டி இன்று ஜோகூர் இஸ்தானா பெசாரில் தமது அரச உரையின் போது சுல்தான் இப்ராஹிம் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் ஒற்றுமையை வளர்த்து ஒருவருக்கொருவர் பர்ஸ்பர மரியாதை செலுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என அரசியல் தலைவர்களை அவர் அறிவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!