Latestமலேசியா

ஜோகூரையும் சிங்கப்பூரையும் இணைக்கும் பாலத்தில் நெரிச்சலை குறைப்பீர் குடிநுழைவு துறைக்கு மந்திரிபுசார் கோரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 6 – சிங்கப்பூரையும் ஜோகூரையும்  இணைக்கும் இரண்டவாது  பாலம் மற்றும்  ஜோகூர் பாலத்தில்   நெரிசலுக்கு உடனடியாக தீர்வு காணும்படி  குடிநுழைவுத் துறைக்கு  ஜோகூர் மந்திரிபுசார்  Onn Hafiz Ghazi   கேட்டுக் கொண்டார்.  சுங்க , குடிநுழைவு மற்றும்  தனிமைப்படுத்தும்  CIQ  மையத்தின்  நுழைவு பகுதிக்கு  வந்தவுடன்  மோட்டார்சைக்கிள்கள் நெரிசலாக  இருக்கும் புகைப்படத்தை  சுட்டிக்காட்டிய     Onn Hafiz ,   ஜோகூர் மக்கள்  இத்தகைய நெருக்கடிக்கு உள்ளாகக்கூடாது என  வலியுறுத்தினார்.    Sultan    Iskandar  Building  மற்றும்  Sultan  Abu Bakar கட்டிட வளாகத்தில்  ஏற்படும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு விவேகமான நடவடிக்கையை எடுக்கும்படி குடிநுழைவுத்துறையை  அவர்  கேட்டுக்கொண்டார்.  இந்த நெரிசலினால்  மக்கள் தொல்லைக்கு உள்ளாகக்கூடாது.

 இன்னும்  எவ்வளவு  காலத்திற்கு    மக்கள் பாதிப்புக்கு உள்ளாக  வேண்டும் என  0nn Hafiz   தமது முகநூலில் கேள்வி எழுப்பியுள்ளார்.  அந்த இரண்டு   தடங்களையுட்ம   தினசரி    300,000 லட்சம் மக்கள்  பயன்படுத்தி வருகின்றனர்.  அந்த இரண்டு   வழிதடங்களுக்கும்  தாம்  நேரடியாக வருகை தந்து அங்கு ஏற்படும் நெரிசலை கண்காணித்துள்ளதாகவும்  இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என  மந்திரிபுசார் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!