Latestஉலகம்

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சிறைச்சாலையில் காதலர் தின விருந்து

இங்கிலாந்து, பிப் 11 – இங்கிலாந்தில் அமைந்துள்ள மிக பழைமையான சிறை காதலர்களுக்கு மிகவும் வித்தியாசமான அனுபவத்தை வழங்க ஆயத்தமாகி வருகிறது. அதாவது, காதலர் தினத்தன்று காதலர்கள் ஆயிரம் ஆண்டு பழமையான சிறைக்கு வந்து உணவு சாப்பிட வாய்ப்பு வழங்கப்படுகிறது.

காதலர்கள் தங்கள் ஜோடியுடன் அந்த பழைமை மிக்க சிறையில் தங்களை அடைத்துக் கொண்டு உள்ளிருந்தபடி தாங்கள் விரும்பிய உணவை ஆர்டர் செய்து சாப்பிட முடியும். அங்கு காதலர்கள் வழக்கமான சிறை உணவை விட சிறப்பான உணவை சாப்பிட முடியுமாம்.

சிறையில் உணவு சாப்பிடுவதற்கான கட்டணம் 215 டாலர்கள், அதாவது ஏறக்குறைய 1024 ரிங்கிட் என கூறப்பட்டுள்ளது. இதுதவிர 900 ஆண்டுகள் பழமையான நார்மன் க்ரிப்ட் வளாகத்திலும் டின்னருக்கு செல்லலாம். இதற்கான கட்டணம் 1095 ரிங்கிட் 95 சென் என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த சிறை தற்போது காதலர் தினத்தை சிறப்பிக்கத் தயாராகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!