Latestமலேசியா

இந்தோனேசியா மெராப்பி எரிமலை வெடிப்பு ; மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

புத்ராஜெயா, டிசம்பர் 7 – இந்தோனேசியா, மேற்கு சுமத்ராவிலுள்ள, மராபி எரிமலை வெடித்த சம்பவத்தில், மலேசியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை.

அதனை இந்தோனேசியாவிலுள்ள, மலேசிய உயர் ஆணையர் உறுதிப்படுத்தியுள்ளதாக, விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

கடந்த ஞாயிற்றுகிழமை, மராபி எரிமலை வெடித்ததில், சுற்று வட்டாரத்தில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு, புழுதி மண்டலம் சூழ்ந்தது.

அச்சம்பவத்தில் பலர் பலியான வேளை ; அடிப்படை வசதிகளும் சேதமுற்றன.

அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கும், இந்தோனேசிய அரசாங்கத்துக்கும் மலேசியா ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்தோனேசியாவிலுள்ள மலேசியர்கள், உதவித் தேவைப்பட்டாலோ, மேல் விவரம் அறிய விரும்பினாலோ, மேடானிலுள்ள, மலேசிய தூதரகத்தை தொடர்புக் கொள்ளுமாறு, விஸ்மா புத்ரா கேட்டுக் கொண்டுள்ளது.

+62614531342 அல்லது +62714523992 என்ற எண்களிலோ, mwmedan@kln.gov.my எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ அவர்கள் மலேசிய தூதரகத்தை தொடர்புக் கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!