Latestமலேசியா

திருவனந்தபுரம் – கோலாலம்பூர் விமானச் சேவையை மலேசியன் ஏர்லைன்ஸ் இரட்டிப்பாக்கும்

கோலாலம்பூர், பிப் 2 – தற்போது நடப்பிலுள்ள திருவனந்தபுரம் ,கோலாலம்பூர் விமானச் சேவையை ஏப்ரல் 2ஆம் தேதி முதல்   இரட்டிப்பாக்கும்  திட்டத்தை  மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம்   அதிகரிக்கும் .   இந்த சேவைக்கு  பயணிகளிடமிருந்து நல்ல வரவேற்பும் தேவையும் அதிகரித்ததால்  இந்த  நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் என மலேசியன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.  வாரத்திற்கு நான்கு  நாட்களுக்கான  திருவனந்தபுரத்திற்கான  விமானச்  சேவையை  கடந்த ஆண்டு  நவம்பர்   மாதம் மலேசியன் ஏர்லைன்ஸ் தொடங்கியது. 

மலேசியன் ஏர்லைன்ஸின்   உலகளாவிய சேவையில்  முக்கிய மார்க்கமாக   இந்தியா திகழ்வதாக   MAG எனப்படும் மலேசிய  விமான  குழுமத்தின் தலைமை அதிகாரி  டெர்செனிஷ்  அரேசந்திரன் தெரிவித்தார்.  திருவனந்தபுரம் நகருக்கான கூடுதல் சேவையை நாங்கள் அறிமுகப்படுத்துவதால் இந்தியாவின் முக்கிய  9 நகரங்களுக்கான   விமானத் சேவை வாரத்திற்கு   71 ஆக அதிகரித்திருப்பதாக  அவர் கூறினார். மேலும் இந்திய  பயணிகளுக்கு  சிறப்பு  கட்டணங்கள்  அறிமுகப்படுத்துவது  குறித்தும் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் என அரேசந்திரன் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!