Latestமலேசியா

ம.இ.காவை வலுப்படுத்த கிளைகளை சீரமைப்பு செய்வீர் கிளைத் தலைவர்களுக்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்து

கோலாலம்பூர் , நவ 18 – ம.இ.கா வலுவாக திகழ வேண்டும் என்றால் கட்சியில் சீரமைப்பை செய்வதற்கு நாடு முழுவதிலும் உள்ள ம.இ.கா கிளைகள் முன்வர வேண்டும். கிளைத்தலைவர்கள் முதலில் தங்களது உறுப்பினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் . ஒரு கிளையில் குறைந்தது 20 உறுப்பினர்களையாவது ஆண்டுக் கூட்டத்திற்கு கொண்டுவரும் வகையில் கிளையில் சீரமைப்பை மேற்கொள்வதற்கு கிளைத் தலைவர்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகைளை எடுக்க வேண்டும் என ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

ம.இ.காவில் எந்தவொரு மாற்றமும் கிளைகள் மூலமாகவே ஏற்பட முடியும் என தாமும் , கட்சியின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணனும் உறுதியாக நம்புகிறோம் என அவர் தெரிவித்தார். ம.இ.காவின் செயல் திட்டங்களை உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் பொறுப்பும் கடப்பாடும் கிளைத் தலைவர்கள் கொண்டிருக்க வேண்டும் . ம.இ.கா என்ன செய்தது என்று கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் கிளைத் தலைவர்கள் கட்சி மேற்கொண்டுவரும் நடவடிக்கை மற்றும் செயல் திட்டங்களை உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என செர்டாங் மேப்ஸ் மாநாட்டு மண்டபதில் ம.இ.காவின் 77ஆவது தேசிய பேராளர் மாநாட்டில் கொள்கையுரை ஆற்றியபோது விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

கிளை, தொகுதி, மாநிலம், தேசியம் என்ற கட்டுக் கோப்பான கட்சியாக ம.இ.கா திகழ்கிறது. இன்று ஒரு பில்லியன் ரிங்கிட் சொத்துக்களை கொண்ட கட்சியாகவும் ம.இ.கா இருக்கிறது. ம.இ.காவுக்கு அருகேயுள்ள நிலத்தை வாங்கியுள்ளோம். இப்போது அந்த நிலத்தில் இரட்டை கோபுரங்களைக் கொண்ட புதிய கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைய மேற்கொண்டு வருகிறோம் . இதன் மூலம் ம.இ.கா வுக்கு நிரந்தரன வருமானத்தை பெறுவதற்கான நல்லதொரு அடித்தளத்தை ஏற்படுயிருக்கிறோம் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ம.இ.கா சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் நாங்கள் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுவருகிறோம். இந்திய சமூதாயத்தின் ஒட்டு மொத்த ஆதரவை பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதிலும் கிளைகள் , தொகுதிகள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆதரவும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து ம.இ.கா தலைமைத்துவம் எதிர்ப்பார்ப்பதாக விக்னேஸ்வரன் கூறினார் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!