Latestமலேசியா

ஒலிம்பிக் தகுதி சுற்று ஹாக்கிப் போட்டி பிரிட்டன் ஜெர்மனி அணிகள் மலேசியாவுக்கு கடும் மிரட்டல்

கோலாலம்பூர், நவ 7 – பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று ஹாக்கி போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை  ஓமன், மஸ்கட்டில் நடைபெறும்போது மூன்று முறை ஒலிம்பிக் வெற்றியாளராக வாகைசூடியுள்ள பிரிட்டன் மற்றும் 5 முறை உலகக் கிண்ண போட்டியில் வெற்றி பெற்றுள்ள ஜெர்மன் ஆகிய அணிகளிடமிருந்து மலேசியா கடும் மிரட்டலை எதிர்நோக்கியுள்ளது. ‘Speedy Tigers’ என வர்ணிக்கப்படும் மலேசியா ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான், கனடா, சிலி மற்றும் சீனா ஆகிய அணிகளையும் சந்திக்கவிருக்கிறது.

ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில் கலந்துகொள்ளும் 8 அணிகள் இரண்டு பிரிவாக ஒவ்வொரு பிரிவிலும் 4 குழுக்கள் இடம் பெற்றுள்ளன. இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் நான்கு அணிகள் அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற முடியும். இந்த தகுதிச் சுற்று போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறும் குழுக்கள் மட்டுமே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறமுடியும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!