Latestமலேசியா

500,000 டன் மெட்ரிக் வெள்ளை அரிசியை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யும்படி இந்தியாவிடம் மலேசியா விண்ணப்பிக்கும்

புத்ரா ஜெயா, மார்ச் 28 – 500.000 டன் மெட்ரிக் வெள்ளை அரிசியை மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யும்படி அரசாங்கம் இந்தியாவிடம் விண்ணப்பிக்கும் என விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் Mohamad Sabu தெரிவித்திருக்கிறார். விரைவில் இந்தியாவிடம் அரச தந்திர ரீதியில் இதற்காக அதிகாரப்பூர்வமாக விண்ணப்பம் செய்யப்படும் என அவர் கூறினார். இதற்கு முன் 170,000 டன் மெட்ரிக் வெள்ளை அரிசியை சிறப்பாக ஏற்றுமதி செய்த இந்திய அரசாங்கத்திற்கு தாம் நன்றி தெரிவித்துள்ளதாக Mohd Sabu கூறினார்.

இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவின் அடையாளமாக Basumati அல்லாத 170,000 டன் மெட்ரிக் வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி இந்தியா சிறப்பு அனுமதி வழங்கியது. அரசாங்கத்திற்கும் அரசாங்கத்திற்குமிடையிலான சிறப்பு ஏற்றுமதி ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் 100,000 டன் மெட்ரிக் வெங்காயத்தின் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கும் படி இவ்வாண்டு தொடக்கத்தில் இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக மலேசியா விண்ணப்பித்துள்ளது. இங்கு வருகை புரிந்த இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது Mohamad Sabu இத்தகவலை வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!