Latestமலேசியா

பெர்லிசில் எஞ்சியிருந்த ஒரே 4D லாட்டரி கடையும் மூடப்பட்டது

கங்ஙார், மார்ச்-8, பெர்லிசில் எஞ்சியிருந்த கடைசி 4D லாட்டரி கடையும் மூடப்பட்டுள்ளது.

Padang Besar-ரில் அமைந்துள்ள Da Ma Cai 4D கடை, மார்ச் 6-ஆம் தேதியோடு தனது செயல்பாட்டை நிறுத்தியது.

இதையடுத்து 4D சூதாட்ட மையங்களை படிப்படியாக ஒழித்துள்ள மாநிலங்கள் வரிசையில் அந்த வட மாநிலமும் புதிதாக இணைந்துள்ளது.

இதற்கு முன் பெர்லிசில் 6 4D லாட்டரி கடைகள் இயங்கி வந்தன; எனினும் சூதாட்ட மையங்களின் உரிமங்கள் புதுப்பிக்கப்படாது என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு ஏற்ப, கடந்தாண்டு ஜூலை முதல் அக்டோபர் வரை அவை கட்டம் கட்டமாக மூடப்பட்டு வந்தன.

4D லாட்டரி கடைகளை மூடுவது பெரிய வருமான இழப்பு தான் என்றாலும், சமூக நலன் என வரும் போது அது போன்ற நடடிக்கைகளை எடுத்து தான் ஆக வேண்டும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஃபாக்ருல் அன்வார் இஸ்மாயில் தெரிவித்தார்.

PAS கட்சி ஆட்சிப் புரியும் கிளந்தான், திரங்கானு, கெடாவுக்கு அடுத்து சூதாட்ட மையங்களுக்கு லைசென்ஸ் வெளியிடுவதை நிறுத்தியுள்ள நான்காவது மாநிலமாக பெர்லிஸ் திகழ்கிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!