Latestமலேசியா

24 சட்டவிரோத குடியேறிகளுடன் படகு துரத்தி பிடிக்கப்பட்டது

கிள்ளான், பிப் 26 – 24 சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிவந்த படகு 9 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக துரத்திச் செல்லப்பட் பின் தடுத்து நிறுத்தப்பட்டது. கிள்ளானுக்கு அருகே Sungai Janggut ட்டிற்கு மேற்கே 4.1 கடல் மைலுக்கு அப் அந்த படகில் இருந்த இந்தோனேசிய மற்றும் மியன்மார் சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். 8 முதல் 52 வயதுடைய அவர்கள் அனைவரும் படகில் சிறப்பு பகுதியியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் அதிகாலை மணி 1.30 அளவில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மெரின் படையின் இயக்குனர் கேப்டன் Abdul Muhaimin தெரிவித்தார்.

இந்தோனேசிய கடல் பகுதியிலிருந்து Pulau Angsa வை நோக்கி சந்தேகத்திற்குரிய படகு ஒன்று வந்ததைத் தொடர்ந்து அப்படகை கண்டறியும் நடவடிக்கையில் மெரின் போலீஸ் ரோந்து படையினர் ஈடுபட்டனர். அந்த படகை நிறுத்தும்படி உத்தரவு பிறப்பித்தும் தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டதால் 75 நிமிடங்களுக்கு பிறகு அப்படகு தடுத்து நிறுத்தப்பட்டதாக Abdul Muhaimin தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!