Latestமலேசியா

அரசாங்கத்தின் PADU தரவுத் தளம்; இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் கண்டது

புத்ராஜெயா ஜனவரி 2 – அரசாங்கத்தின், PADU – மத்திய தரவுத்தளம், கிட்டதட்ட ஆறு மாதக் கால மேம்பாடு மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்கு பின்னர், இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை, பயனர்கள் தங்கள் சுய விவரங்களை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக, PADU தரவுத் தளத்தை பயன்படுத்தலாம் என, பொருளாதார அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ நோர் அஸ்மி டிரோன் தெரிவித்தார்.

அரசாங்கத்திடம் மிக அண்மைய விவரங்கள் இருப்பதை உறுதிச் செய்யவும், தகுதியான உதவிகளை பெறுவதிலிருந்து விடுபட்டு போய்விடாமல் இருக்கவும், PADU தளவுத் தளத்தில் மக்கள் தங்கள் சுய விவரங்களை பதிவிடுவது முக்கியமாகும் என அஸ்மி சொன்னார்.

அந்த ஒருங்கிணைந்த தரவுத்தளம், மக்கட்தொகை, கல்வி, சுகாதாரம், அரசாங்க உதவிகள் மற்றும் குடும்ப வருமானம் என தனிப்பட்ட பல்வேறு விரிவான விவரங்கள் அடங்கிய ஓரிட தரவு மையமாக செயல்படும்.

அதனால், PADU தரவுத் தளத்தில் இருக்கும் தகவல்கள் கசியாமல் இருப்பதை உறுதிச் செய்ய, அதன் பாதுகாப்பு அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், அஸ்மி சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!