
தலைநகர், TBS பேருந்து முனையத்தில், டிக்கெட்டை ‘பிரிண்ட்’ செய்வதற்காக, பல மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள், அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
இணையம் வாயிலாக அவர்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை வாங்கிவிட்ட போதிலும், அதனை பிரிண்ட் செய்ய வேண்டுமென இறுதி நேரத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டதால், நிலைமை பரபரப்பானது.
நெருக்கடிக்கு இலக்கான பயணிகள், டிக்கெட்டுகளை பிரிண்ட் செய்வதற்காக, நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி ஒன்று நேற்று தொடங்கி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
டிக்கெட்டுகளை பிரிண்ட் செய்ய பெரிய கூட்டம் திரண்ட வேளை ; ஒரு சில டிக்கெட் முகப்புகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
TBS நிர்வாகனத்தின் அந்த செயலால், பல பயணிகள் பேருந்துகளை தவறவிட்டதோடு, அதிக விலை கொடுத்து புதிய டிக்கெட்டை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், பயணிகள் சிலர் தங்கள் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.
TBS ‘ஆன்லைன்’ முறையை எப்போது மேம்படுத்த போகிறது எனவும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.