Latestஇந்தியாஉலகம்சினிமா

The GOAT படத்தின் டிரேய்லர் வெளியீட்டின் தேதி , நேரம் குறித்த தகவல் இன்று வெளியாகுமா? ஆர்வம் தாங்காத தளபதி ரசிகர்கள்

சென்னை, ஆகஸ்ட்-15, (The G.O.A.T. – Greatest Of All Times) படத்தின் டிரேய்லர் எப்போது வெளியாகும் என்பது இன்று அறிவிக்கப்படலாமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் ‘தளபதி’ விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

விஜயின் 68-வது படமான The GOAT-டில் ஜெயராம், பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், சினேகா, லைலா என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா படத்துக்கு இசையமைக்கிறார்.

உலகம் முழுவதும் வரும் செப்டம்பர் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று படம் திரையீடு காணவிருக்கும் நிலையில், இதுவரை 3 பாடல்கள் வெளியாகியுள்ளன.

The GOAT, IMAX தொழில்நுட்பத்தில் வெளியீடு காணவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!