கோலாலம்பூர், பிப் 9 – தலைநகர் ஜாலான் பந்தாய் பாருவில் (Jalan Pantai Baru) உள்ள TM கோபுரம் விற்பனைக்கு வந்திருப்பதை அடுத்து, அந்த கட்டடம் தங்களுக்கு சொந்தமில்லை எனவும், அலுவலகங்கள் வாடைகைக்கே எடுக்கப்பட்டிருப்பதாக, டெலிகோம் மலேசியா (Telekom Malaysia) நிறுவனம் தெரிவித்தது.
அந்த வானுயர் கட்டத்தின் உரிமையாளர் Menara ABS Bhd என டெலிகோம் மலேசியா ஓர் அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டிருக்கின்றது. டெலிகோம் மலேசியா தற்போது, TM கோபுரத்திலிருந்து அதன் அலுவலகங்களை TM Annexe 1, TM Annexe 2 உட்பட அதற்கு சொந்தமான வர்த்தக தளங்களுக்கு இடம் மாற்றி வருவதாக, டெலிகோம் மலேசியா மேலும் கூறியது.