
தும்பாட். செப் 20 – இரண்டு ஆடவர்கள் பயணம் செய்த Toyata Hilux வாகனம் ஒன்று ஆற்றில் விழுந்ததில் அதில் இருந்த இருவர் மாண்டதாக அஞ்சப்படுகிறது. Tumpat . kampung Cendurung Kubu, Sungai Chenderung Kubu ஆற்றில் அந்த வாகனம் விழுந்தது. 43 வயதுடைய ஆடவரும் அவரது 54 வயதுடைய மைத்துனரும் இச்சம்பவத்தில் மூழ்கியதாக நம்பப்படுவதாக Pengkalan Kubor தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் அதிகாரி Mohd Faizol Hisham தெரிவித்தார். அதிகாலை ஒரு மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கிடைத்ததாக அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து அங்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையைச் சேர்ந்த 15 வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். அந்த Toyata Hilux ஆற்றில் விழுந்த இடத்தை தீயணைப்பு படையினர் அடையாளம் கண்டுள்ளதோடு அந்த வாகனத்தை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக Mohd Faizol தெரிவித்தார்.