Latestமலேசியா

TV 0KEY அலைவரிசையில் வசந்தம் நிகழ்ச்சியை ஒளிபரப்புவதா ? அதிர்ச்சியில் ரசிகர்கள்

கோலாலம்பூர், மே  4- மலேசிய தொலைக்காட்சியின் இரண்டாவது ஒளி அலையில் இவ்வளவு நாளாக ஒளிபரப்பப்பட்டு வந்த  நடப்பு விவகாரங்களை அலசி ஆராயும் வசந்தம் வாரந்திர  நிகழ்ச்சி இம்மாதம் 1 ஆம் தேதி முதல் Okey அலைவரிசைக்கு  முன்பின் அறிவிப்பு எதுவுமின்றி திடீரென மாற்றப்பட்டுள்ளது குறித்து ரசிகர்கள் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தெரிவித்தனர்.

பாண்டித்துரையை நிகழ்ச்சி ஒருங்கிணையப்பாளராக கொண்டு டிவி 2 இல் ஒளிபரப்பட்டு வந்த  வசந்தம் நிகழ்சி ஆர்.டி,எமின்  தமிழ் செய்தி அறிக்கைக்குப் பின் அதிகமான  ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சியாகும்.

அந்த நிகழ்ச்சியை திடீரென  OKeY அலைவரிசைக்கு மாற்றப்பட வேண்டிய அவசியம் ஏன் என தொலைக்காட்சி ரசிகர்களும்  வினவினர்.

உண்மையில்  OkeY  அலை வரிசையானது  சபா, சராவ மக்களுக்காக  அரசாங்கம் உருவாக்கிய ஒன்றாகும்.

அவ்விரு மாநிலங்களுக்கும் உள்ள நகர் மற்றும் புறநகர் மக்களுக்காகவும் மற்றும் இளையோர்களை கவரும் நோக்கத்தில் OkeY அலைவரிசை உருவாக்கப்பட்டதாகும்.

இந்த OkeY அலைவரிசையை   அனைவரும் பார்க்க முடியாது.  சிறப்பு டிக்கோர்டர் வைத்திருப்பவர்கள் மட்டுமே  OkeY அலைவரிசையில் ஒளிபரப்படும் நிகழ்ச்சியை பார்க்க முடியும்.

இந்த நிகழ்ச்சியை திடீரென  OkeY அலைவரிசையில் ஒளிபரப்பினால்  அனைத்து மக்களுக்கும் சென்றடையாது.

அரசாங்கத்தின் கொள்கைகள் மக்களிடம் சென்றடைவதற்கு ஒரு பாலமாக இருந்து வந்த  வசந்தம் நிகழ்ச்சியை காலப்போக்கில் அகற்றிவிட்டு அந்த நேரத்தில் விளம்பர நிறுவன ஆதயாத்தைக் கொண்ட நிகச்சிகளை  ஒளிபேற்றுவதற்கான  ஒரு திட்டமா என தொலைக்காட்சி ரசிகர்கள்  கேட்கின்றனர்.

இதனிடையே  வசந்தம் நிகழ்ச்சியை மீண்டும்   ஆர்.டி.எம்  2ஆவது அலைவரிசையில் ஒளிபரப்பப்படுவதற்கு  தொடர்பு, பல்லூடக  அமைச்சர் சைபுடின்  அப்துல்லா உறுதிப்படுத்த வேண்டும் என டிரா மலேசியா தலைவரான  சரவணன் சின்னப்பன் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையே மின் அஞ்சல் வழியாக   டத்தோஸ்ரீ  சைபுடின் அப்துல்லாவிற்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.

விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளும் கடிதம்  இன்று காலை  சைபுடின் அப்துல்லாவிடம்  வழங்கப்பட்டதாக  சரவணன்  கூறினார்.

ம.இ,காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ   எஸ்.ஏ விக்னேஸ்வரன் மற்றும் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோரும் இந்த விவகாரத்தில் தலையிட்டு  பழையபடி  வசந்தம் நிகழ்ச்சி  ஆர்.டி,எம்  2ஆவது அலைவரிசையில் ஒளிபரப்பாகுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என மலேசிய தமிழ்  காப்பத்தின்   தேசிய தலைவர் சு, வை லிங்கம் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!