
கோலாலம்பூர், மார்ச் 17 – TVET – தொழிற்கல்வியை முடித்த மாணவர்களுக்கு , முதலாளிகள் தொடக்க சம்பளமாக 3,000 ரிங்கிட்டை வழங்குமாறு, துணைப் பிரதமர் Datuk Seri Dr. Ahmad Zahid Hamidi கேட்டுக் கொண்டார்.
TVET மாணவர்கள் தொழிற்திறன் பயிற்சியை முடித்த திறன்பெற்ற மாணவர்கள். எனவே, அவர்களுக்கு அந்த தொடக்க சம்பளத்தை வழங்குவது ஏற்புடையதே என துணைப் பிரதமர் கூறினார்.
திறன் பெற்ற ஊழியர்கள், நிறுவனத்தின் உற்பத்தியாற்றலை அதிகரிக்கக் கூடியவர்கள். இதனால் உற்பத்தி அதிகரித்து, நீண்ட கால அடிப்படியில் செலவினத்தைக் குறைக்க முடியும் . எனவே, வேலை சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய TVET மாணவர்களுக்கு அந்த தொடக்க சம்பளத்தை வழங்குவது நியாயமே என சாஹிட் குறிப்பிட்டார்.