
கோலாலம்பூர், நவ 28 – யுகேஎம் – மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தின் 50 -வது பட்டமளிப்பு விழாவின்போது, மலேசியப் பல்கலைக்கழக நிபுணத்துவ மருத்துவ மையத்தின் தலைவர் டாக்டர் பாலனுக்கு தொழில்முனைப்புக் கல்விக்கான கெளரவ முனைவர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அப்பல்கலைகழக வேந்தரான நெகிரி செம்பிலான்
மாநில ஆட்சியாளர் Tuanku Muhriz ibni Almarhum Tuanku Munawir – ரிடமிருந்து அவர் அந்த கெளரவ முனைவர் பட்டத்தை பெற்றார்.
அந்த கெளரவ முனைவர் பட்டத்தை, தமது வாழ்வில் கிடைத்த மிகப் பெரிய பெருமையாக கருதும் டாக்டர் பாலன், தமது இந்த உயர்விற்கு காரணமாக இருந்த தமது தாயாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இளைஞராக இருந்த போதே தமது தந்தையை இழந்து விட்ட நிலையில், போதிய வசதி இல்லாத நிலையில் தாயின் ஆதரவுடன் மலாக்காவிலிருந்து பரிச்சயமில்லாத கோலாலம்பூருக்கு வந்ததாகா டாக்டர் பாலன் குறிப்பிட்டார்.
வாழ்க்கையில் பல தடைகளைத் தாண்டி, இன்று தாம் தற்போது அடைந்திருக்கும் இந்த உயர்வுகளுக்கு தமது தாயார் வழங்கிய ஊக்கமே காரணமென டாக்டர் பாலன் கூறினார்.