Latestமலேசியா

UniMAP பல்கலைக்கழகத்தின் மாணர் விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 26 மோட்டார் சைக்கிள்கள் தீயில் அழிந்தன

ஆராவ், மே 11 – யுனிமெப் எனப்படும் மலேசிய பெர்லீஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் மோட்டார் சைக்கிள் நிறுத்திவைக்கப்படும் இடத்தில் ஏற்பட்ட தீயில் 26 மோட்டார் சைக்கிள்கள் அழிந்ததோடு மேலும் 10 மோட்டார் சைக்கிள்கள் சிறிய அளவில் சேதம் அடைந்தன. அதிகாலை மணி 4.34 அளவில் அந்த தீவிபத்து குறித்த தகவல் தங்களுக்கு கிடைத்ததாக Arau மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Ahmad Mohsin Md Rodi தெரிவித்தார். இச்சம்பவத்தில் ஒட்டுமொத்தமாக 36 மோட்டா சைக்கிள்கள் பாதிக்கப்பட்டன. இது தொடர்பாக இன்னமும் விசாரணை நடைபெற்று வருவதோடு தீயணைப்பு படையின் தடயயியல் பிரிவின் அதிகாரிகளும் சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை புரிந்து விசாரணை மேற்கொண்டதாக Ahmad Mohsin தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!