Latestமலேசியா

UPNM பல்கலைக்கழகத்தில் பகடிவதை மீண்டும் மீண்டும் நிகழுவதா? – மாமன்னர் கண்டனம்

கோலாலம்பூர், நவம்பர்-12 – UPNM எனப்படும் மலேசியத் தேசியத் தற்காப்புப் பல்கலைக்கழகத்தின் இராணுவப் பயிற்சி மையத்தில் பகடிவதைச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழுவது குறித்து, மாமன்னர் கவலையும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.

தற்காப்பு அமைச்சு அதனைக் கடுமையாகக் கருதி, இனியும் அது நடக்காதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுல்தான் இப்ராஹிம் உத்தரவிட்டார்.

வீரர்களின் மனவலிமையை மேம்படுத்த இராணுவ முகாம்களில் கடுமையான பயிற்சிகள் வழங்கப்படுவது வழக்கமான ஒன்று தான்.

ஆனால், அதற்காக அது பகடிவதையாக மாறி காயத்திலோ அல்லது மரணத்திலோ போய் முடிவதை அனுமதிக்க முடியாது.

அது மனிதாபிமானமற்றச் செயல் என மாமன்னர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் நோர்டின், இஸ்தானா நெகாராவில் மாமன்னரை மரியாதை நிமித்தம் சென்று கண்டார்.

UPNM சுங்கை பீசி முகாமில் முதலாமாண்டு மாணவர் ஒருவர் மூத்த மாணவரால் நெஞ்சில் மிதிபட்டு விலா மற்றும் முதுகெலும்பு முறிவுக்கு ஆளானது கடந்த ஞாயிறன்று அம்பலமானது.

நான்காமாண்டு மாணவரால் இரண்டாமாண்டு மாணவர் இஸ்திரி பெட்டியால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் கடந்த வாரம் தான் நீதிமன்றம் வரை சென்றது.

சில ஆண்டுகளுக்கு முன்பு அதே போல் இஸ்திரிப் பெட்டியால் உடல் முழுவதும் சூடு வைக்கப்பட்டு மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!